சோனாக்ஷி, ஜோதிகா நடித்துள்ள சிஸ்டம்
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிஸ்டம். இதில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். மேலும் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பவேஜா ஸ்டுடியோஸ் பேனர் இன் கீழ் பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படு த்துகிறது. ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது.