ஒரு மில்லியனை கடந்த ஸ்வாசிகாவின் “போகி” டிரெய்லர்

ஒரு மில்லியனை கடந்த ஸ்வாசிகாவின் “போகி” டிரெய்லர்
லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை ஸ்வாசிகா. சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான மாமன் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்து பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், போகி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

லீட் ரோலில் புது முகங்கள் நடித்துள்ள போதும், இதில் அவரது கதாபாத்திரத்தை மட்டும் கேட்டுக் கொண்டு நடித்துள்ளார்.நம் சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை வி ஐ சினிமாஸ் குளோபல் நெட்வொர்க் அண்டு லிங்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Comments (0)
Add Comment