பார்த்திபன் பட ஹீரோயினான சுவாசிகா
நடிகர் மற்றும் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அடுத்து 3 பட பணிகளில் ஈடுபட உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்டாள் என்ற படத்தை இயக்க உள்ளேன். ‛லப்பர் பந்து’ சுவாசிகா ஹீரோயின். தலைப்பில் இருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என தெரியும். டூரிஸ்ட் பேமிலி மாதிரி இது பக்கா குடும்பக் கதை.அதற்கடுத்து ‛ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்’ என்ற விருது படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் முயற்சியும், சிங்கிள் ஷாட்டும் பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனர் ஆகப்போகிறார். அந்தப் படத்தை நானே தயாரிக்க உள்ளேன். அந்த படத்திலும் ஒரு ரோலில் நடிக்கிறேன். மேலும் அதில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்று கூறியுள்ளார்.