சூர்யா 46 ஃபர்ஸ்ட் லுக்
ரெட்ரோ படத்துக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படம் ஷூட்டிங் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது. டீசரில் வக்கீலாகவும், கருப்பாகவும் சூர்யா மிரட்டி இருந்தார். இந்த டீசரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும்
சூர்யா 46 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இது சூர்யாவுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது.