சுருதிஹாசன் நெகிழ்ச்சி பதிவு
நடிகர் கமல்ஹாசன் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார். பதவியேற்பு விழாவிற்கு அவரது மகளும்
நடிகையுமான சுருதி ஹாசனும் சென்றிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் அன்பான அப்பா’ இன்று நீங்கள் துணிச்சலான புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.ராஜ்யசபாவில் உங்கள் குரல் ஈர்ப்புடன் எதிரொலிக்கும்
போது நீங்கள் சத்யபிரமாணம் செய்வதை பார்த்தது என் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். எப்போதும் போல
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.