சூர்யாவின் அடுத்த 200 கோடி படம்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி வெளியான இப்படம், குறுகிய காலத்திலே யே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து இந்த படமும் வசூல் சாதனை செய்துள்ளது. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்தி ருப்பது அவரது நட்சத்திர மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யா உடன் மமிதா பைஜு, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சித்தாரா என்டர்டெயின்மென்ட், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் உடன் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது.