கருப்பு பட ஹிட் ரகசியம் சொன்ன சூர்யா
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான கருப்பு படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. கடந்த பத்து நாட்களில் 300 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ள இப்படத்தின் வெற்றி விழாவில் சூர்யா பேசியது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நொடியில் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன். பட ஷூட்டிங் முடிந்து ரஷ் பார்த்தபோது எனது உதவியாளர் ஒருவர் படம் முழுவதும் கருப்பு சாமி பற்றி சூப்பராக உள்ளது. இதில் கருப்புசாமி பாட்டு ஒன்று சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார். உடனே இயக்குனரிடம் அந்த யோசனையை சொல்லி கடைசியாக கருப்புசாமி பாடல் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. தற்போது அந்த பாடல் தான் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து இவ்வளவு பெரிய ஹிட் அளித்துள்ளது. இந்த படத்தை இவ்வளவு பெரிய ஹிட் படம் ஆக்கிய தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்றார்.