ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி:காரணம் இதுவா?

ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி:காரணம் இதுவா?
கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது.இந்த நிலையில்,அந்த படத்தில் இருந்து விலகுவ தாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ரஜினிகாந்தின் “தலைவர்173” படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கி றேன். அதேநேரம், நான் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்குகிறேன் என செய்தி வெளி யானபோது உற்சாகமான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு்க்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போது ஈகோ பிரச்சனை என தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment