காஜல் அகர்வால் படத்துக்கு திடீர் சிக்கல்
காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள படம், ‘தி இந்தியா ஸ்டோரி’. சேட்டன் டிகே இயக்கியுள்ள இப்படத்தை சாகர் பி ஷிண்டே எழுதித்தயாரித்துள்ளார்.இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் டீஸர் மற்றும் விளம்பரங்களில் விவசாயம், பால் உற்பத்தி குறித்து ஆதாரமற்ற, தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி பவேஷ் சோதா என்ற தொழிலதிபர் சார்பில் படக்குழுவுக்கு வழக்கறிஞர் ஹிரண்யா பாண்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பூச்சிக்கொல்லி பயன்பாடு, பால் கலப்படம், கோழி வளர்ப்பு மற்றும் புற்றுநோய் அதிகரிப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் இதுபோன்ற காட்சிகள் விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தித் துறையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவி க்கப்பட்டுள்ளது.