125 நடன இயக்குநர்களை கௌரவித்த ஸ்ரீதர் மாஸ்டர்
முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடனப் பயிற்சி வழங்கி வரும் ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை கௌரவிக்கவும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.அந்த வகையில் ,’டான்ஸ் டான் 2′ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை தற்ப்போது சென்னையில் நடத்தி வருகிறது. வேல்ஸ் கலையரங்கில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் 1973ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.அதோடு அகாடமி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.