ஸ்பைடர் மேன் பட புக்கிங் துவக்கம்

ஸ்பைடர் மேன் பட புக்கிங் துவக்கம்
டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படம், ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை பல்வேறு பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் வெளியிடுகிறது. இதன் மூலம் ரசிகர்கள் ஒவ்வொரு ‘ஸ்விங்’அசைவு, சண்டைக்காட்சி மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பெரிய அளவில் அனுபவிக்க முடியும்.

Comments (0)
Add Comment