ரஜினி படத்தை கன்ஃபார்ம் செய்த சௌந்தர்யா
ரஜினி நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவரது 75-வது பிறந்தநாளை யொட்டி கடந்த 12-ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்கு களும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இதுவரை இந்த படம் ரூ.10 கோடி வசூலை பெற்றுள்ளது.இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா அளித்த பேட்டியில், 25 வருடத்திற்கு பிறகும் எல்லோரும் ‘படையப்பா’ படத்தை இவ்வளவு கொண்டாடுகிறீர்கள். அப்பா எழுதின கதை இப்போதும் புதிய படம் பார்ப்பது போல் உள்ளது.படத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் ரசிகர்கள் மனதிற்குள் அப்படியே ஊறி இருக்கிறது.கமலுடன் இணைந்து அப்பா படம் பண்ணுவது உறுதி. நான் அடுத்ததாக டைரக்ஷன் பண்ணுவதற்கு பணியை தூக்கி உள்ளேன் என்றார்.