இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய சௌந்தரராஜா
நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தின ர்களாகக் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய் சரவணன், வேளாண் செம்மல் கோ.சித்தர் மற்றும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது, இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும். அதோடு நமது முதல்வர் ஜோசப் விஜய் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்” என்று கூறியிருந்தார்.அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என்றார்.