ஷூட்டிங் ஸ்பாட்டில் சமையல் செய்த சோபிதா
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த தமிழில் அறிமுகமானவர் நடிகை சோபிதா துலிபாலா. அதன்பிறகு பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி சமையலில் தீவிர ஆர்வம் கொண்டவர் சோபிதா. அவரது சமையல் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் புகழ்ந்து தள்ளி இருந்தார். இந்நிலையில் சோபிதா புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தளத்தில் கொளுத்தும் வெயிலில் சுட சுட சமையல் செய்து படக்குழுவினர் அனைவருக்கும் பரிமாறி அசத்தினார். இவரைப் போன்று படப்பிடிப்பு தளத்தில் படகுழுவினருக்கு பிரியாணி செய்து தருவது அஜித்தின் வழக்கமான ஸ்டைல் ஆகும்.