சேயோன் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த எஸ்கே

சேயோன் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த எஸ்கே
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் “சேயோன்”. பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் சிறிது ஓய்வெடுப்பதற்காக ஊட்டிக்குச் சென்றிருந்த சிவகார்த்திகேயன், அங்கே ரிலாக்ஸ் ஆக தான் இருப்பது போன்ற போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது தனது ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விமானம் மூலம் மதுரை வந்த சிவகார்த்திகேயன் அங்கிருந்து நேராக சேயோன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் நேற்று முதல் பங்கேற்று வருகிறார்.

Comments (0)
Add Comment