பாடலாசிரியராக பதிவு செய்த எஸ்கே

பாடலாசிரியராக பதிவு செய்த எஸ்கே
நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல முகம்கள் கொண்ட சிவகார்த்திகேயன், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இணைந்துள்ளார். இது குறித்து சங்கத் தலைவர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில்“தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகர்த்திகேயன். அவரை மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வது தொடர்பாகவும் எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக நானும், என்னுடன் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் செல்வபாரதி, இயக்குனர் நவீன் ஆகியோர் சந்தித்தோம்.எங்களின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனை களும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் எங்களை வழி அனுப்பி வைத்ததை மகிழ்வாக பகிர்கிறோம்.

Comments (0)
Add Comment