‘சிவ சம்போ’ -விமர்சனம்

‘சிவ சம்போ’ -விமர்சனம்
போலீஸ் அதிகாரியான தில் நட்ராஜ், தனது காதல் மனைவி ஷிவானி இறந்து விட்டதாக நினைத்து, அவரது சாவுக்கு காரணமானவர் களைபழி வாங்குகிறார்.அவள் இறப்புக்கு காரணம் என்ன? அவர்கள் காதலிப்பதற்கு முன்பு அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை. ஹீரோ தில் நட்ராஜ் போலீஸ் ஆஃபீஸராக மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார்.கிராமத்து பெண்ணாக ஹீரோயின் ஷிவானி சிறப்பாக நடித்து கவனிக்க வைக்கிறார். வில்லனாக நடித்துள்ள இயக்குனர் பகவதி பாலா கொடூரமாக நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.ஒரே நபர் பலரை திருமணம் செய்கிற மோசடி விவகாரத்தை கிரைம் திரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் பகவதி பாலா.ஏ.சி ஜான்பீட்டரின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

Comments (0)
Add Comment