சிம்புவின் “சிலம்பாட்டம்” ரீ ரிலீஸ்

சிம்புவின் “சிலம்பாட்டம்” ரீ ரிலீஸ்
எஸ் டி ஆர் பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன் மாஸ் படம், அவரது கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகஅமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து டபுள் ஆக்ஷனில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் பெரிய வெற்றி பெற்றிருந்தது.லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ் . ரங்கராஜன் தாயாரிப்பில், உருவான இப்படம் படம் இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மாற்றப்பட்டு வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment