ராஜ் ஐயப்பாவுக்கு ஜோடியான ஷ்ரிதா ராவ்
அறிமுக இயக்குனர் ராஜன் ரவி இயக்கும் புதிய படத்தில் ராஜ் ஐயப்பா ஹீரோவாக நடிக்கிறார். ஷ்ரிதா ராவ் ஹீரோயின் ஆக நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சவுந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு கிரண்குமார் ஒளிப்பதிவு செய்ய,பாலாசுப்பிரமணியன் இசை அமைக்கிறார். மிஸ்டர் பிக்சர்ஸ் ஸ்டூடியோ மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் எக்ஸ்ட்ரா மதியழகன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.