அஜித் ஜோடியாகும் ஸ்ரீநிதி ஷெட்டி
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் 64-வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது துவங்கி உள்ளது.
வரும் நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை 2026 கோடையில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில், ‘கே.ஜி.எஃப்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.