இயக்குனர் கசாலி நடத்தும் குறும்பட போட்டி

இயக்குனர் கசாலி நடத்தும் குறும்பட போட்டி
ஆர் எம் கே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபிலிம் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் நடத்தும் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வரும் 29 அன்று ‘பிரசாத் லேப் தியேட்டரில்’ நடைபெற இருக்கிறது. இயக்குனர் கஸாலி & மாரி பாண்டியர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திரைத் துறையைச் சேர்ந்த பல முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ. 25,000 வழங்கப்படுகிறது.சிறந்த இயக்குநர்: ரூ. 15,000,சிறந்த நடிகர்: ரூ. 10,000, சிறந்த சமூகப் படம்: ரூ. 10,000 மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஷீல்டு & சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.மேலும், இந்த ஆர் எம் கே கம்பெனி முழுநீள திரைப்படம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட உள்ளது.

Comments (0)
Add Comment