சிவராஜ்குமார் புதிய பட ஷூட்டிங் துவக்கம்
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் மற்றொரு புதிய படம் வரும் 3-ம் தேதி தூங்குகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் துவங்கி அதன் பின் மண்டியா, இமாச்சலப் பிரதேசம், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.பிரபல தயாரிப்பு நிறுவனம் கே வி என் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் ஜெயராம், சாய் குமார்,கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, பிரகாஷ் பெலவாடி,சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.