‘நெடுஞ்சாலை’ டூ ‘கயிலன்’ ட்ராவல் பற்றி ஷிவதா

‘நெடுஞ்சாலை’ டூ ‘கயிலன்’ ட்ராவல் பற்றி ஷிவதா
அருள் அஜித் இயக்கியுள்ள படம் கயிலன். இதில் பிரஜின், ரம்யா பாண்டியன்,ஷிவதா உள்பட பலர் நடித்து உள்ளனர். பி.டி. அரச குமார் தயாரித்துள்ள இந்த படம் வரும் 25-ந்தேதி வெளியாகிறது.

இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை ஷிவதா பேசுகையில், ”’நெடுஞ்சாலை’ படத்திலிருந்து ‘கயிலன்’ படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் நடிக்கிறேன். நல்ல கதைகள் வந்தால் உடனே அடிக்க ஒத்துக் கொள்வேன். அது போல தான் இந்த படத்திலும் நடித்துள்ளேன். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும்.இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Comments (0)
Add Comment