பைக்கர் படத்துக்காக 20 கிலோ எடையை குறைத்த ஷர்வானந்த்
அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், ஷர்வானந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’. இதில் டாக்டர் ராஜசேகர்,அதுல் குல்கர்னி, மாளவிகா நாயர் உள்பட பலர் நடித்து உள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை பிவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. வரும் 3-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ஷர்வானந்த், இயக்குனர் அபிலாஷ் ரெட்டி,நடிகர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஷர்வானந்த் பேசியது, ‘பைக்கர்’ படம் தான், இதுவரை நான் நடித்த படங்களில் சிறந்த படம். இப்படத்தின் கேரக்டருக் காக நான் 20 கிலோ எடையை குறைத்தேன் என்றார்.