சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். கே ஆர் ஜி கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனுவுடன், சீமான் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக் கிறார்.
மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்டு சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் படமாக உருவாகிறது. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா, மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.