ஷாருக் கதையில் எஸ்கே: உண்மையை சொன்ன முருகதாஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது,“7–8 ஆண்டுகளுக்கு முன் மதராசி பட யோசனையை நான் ஷாருக் கானிடம் சொல்லியிருந்தேன். அப்போது அந்தக் கதை அவருக்கும் மிகவும் பிடித்தது. நாம் இந்த படத்தை செய்யலாம் என்று அவர் கூறினார். ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் அவருக்கு மெசேஜ் அனுப்பிய போது, அவரிடமிருந்து பதில் மிகவும் தாமதமாக வந்தது. அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொள்ளவில்லை. இப்போது சிவகார்த்திகேயனுக்கு உடல் நெகிழ்ச்சி அதிகம் இருப்பதால், அந்தக் கதையை அவருக்காக மேலும் அபிவிருத்தி செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.