ஆண்ட்ரியாவை பார்த்தால் விஜய் சேதுபதிக்கு நரசுஸ் காபி ஞாபகம் வருதாம்!

ஆண்ட்ரியாவை பார்த்தால் விஜய் சேதுபதிக்கு நரசுஸ் காபி ஞாபகம் வருதாம்!
அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கி உள்ள படம் ‘மாஸ்க்’.இதில் கவின், ஆண்ட்ரியா, ருகானி ஷர்மா,சார்லி, பாலசரவணன், வி.ஜே.அர்ச்சனா உள்பட பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு
ஜி. வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வரும் 21-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தை ஆண்ட்ரியா,
வெற்றிமாறன், எஸ்.பி, சொக்கலிங்கம் ஆகியோர் தயாரித்து உள்ளனர். இதன் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியது,‘நான் சின்ன வயசுல மெரினா பீச்சில் சிலையை பார்த்து வியந்தேன். அதன் பிறகு ஆண்ட்ரியாவை பார்த்து வியக்கிறேன். ரொம்ப வருஷமாக அப்படியே இருக்கிங்க… உங்கள் அழகு செம…!. உங்களைப் பார்க்கும் போது முன்பு நரசுஸ் காபி விளம்பரத்தில் பார்த்தது போலவே இருக்கிறீங்க.. என்று ஆண்ட்ரியா அழகை வர்ணித்து பேசி அவரை வெட்கப்பட வைத்தார்.

Comments (0)
Add Comment