சாருகேசி- விமர்சனம்

சாருகேசி- விமர்சனம்
பிரபல கர்நாடக இசைக் கலைஞராக புகழில் உச்சியில் இருக்கும் ஒய்.ஜி. மகேந்திரன் வீட்டுக்குள் மருமகளாக நுழைவும் ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பா உங்கள் மகனே இல்லை என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார். ஏற்கனவே தந்தை மீது விரக்தியில் இருக்கும் ராஜ் ஐயப்பா இதை கேட்டதும் இன்னும் கொஞ்சம் டென்ஷன் ஆகிறார். இதனால் மன வேதனை அடையும் ஒய். ஜி. மகேந்திராவுக்கு திடீரென அல்சைமர் நோய் வந்து நினைவுகளை இழக்கிறார்.அதன் பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. ஒய் ஜி மகேந்திரனின் புகழ்பெற்ற மேடை நாடகமான சாருகேசி கதையை சினிமாவிற்கு ஏற்றார் போல் மாற்றி, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பாலச்சந்தரின் சிந்து பைரவி பாணியில் கொடுத்துள்ளார். இருப்பினும் ஒரு மெகா சீரியல் பார்த்த பீலிங் வருகிறது.டைட்டில் ரோலில் நடித்துள்ள ஒய் ஜி மகேந்திரா, போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு நடித்து அசத்துகிறார். மனைவியாக வரும் சுகாசினி அவர் பங்குக்கு நடித்து தள்ளுகிறார். மேலும் ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், தலைவாசல் விஜய், சமுத்திரக்கனி, மதுவந்தி,ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பு கதைக்கு பொருந்தி உள்ளது. கெஸ்ட் ரோலில் வரும் சத்யராஜ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தேவாவின் பின்னணி இசை மற்றும் சஞ்ஜயின் ஒளிப்பதிவு சிறப்பு.

Comments (0)
Add Comment