மகிழ்ச்சியில் சரவணன்

மகிழ்ச்சியில் சரவணன்
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ் ஜீ5 ல் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதை 18 கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்திருந்தார்.
நீதிமன்ற வழக்கின் பின்னணியில் உருவான சீரிஸ் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சரவணன் பேசியது, 90 களில் நான் ஹீரோவாக வந்த போது ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். அதேபோல் இப்போது இந்த சீரிஸ் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார்.

Comments (0)
Add Comment