அஜித் பாணியில் சாரா கொடுத்த பதிலடி
விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் இள வயது ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் டீன் ஏஜில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ‘துரந்தர்’ படத்தில் சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது.இருப்பினும் 40 வயதான ரன்வீர் சிங்குக்கு 20 வயது சாரா அர்ஜுன் ஜோடியாக நடித்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சாரா கூறியது,நான் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இல்லை. எனவே இது பற்றி எதுவும் தெரியாது.ஒவ்வொருவரு க்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும். வாழு…வாழ விடு என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே வயது பற்றிய விமர்சனம் பற்றி நான் யோசிக்கவோ, கவலைப்படவோ இல்லை என்றார்.