ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் முதல் பாகத்தில் யோகி பாபு நடித்திருந்த நிலையில், தற்போது இதில் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் மற்றும் லிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தானம்,11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இதில் நடிக்க இருக்கிறார். அதோடு சிம்புவுடன் அவருடைய 49 வது படத்திலும் சந்தானம் நடிக்கிறார்.