சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி ‘
இளம் நடிகர் சத்யதேவ் நடிக்கும் படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட் டுள்ளார். இப்படம் அவரின் 16வது திரைப் படமாகும்.ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ஆக்சன் திரில்லராக உருவாக்கியுள்ள இப்படம், தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சுற்றுச்சூழல் அதிரடி திரில்லர் என்ற ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹர்ஷா மல்லிகார்ஜுன், தேவ் தீப் காந்திகுண்டு ஒளிப்பதிவு செய்ய, சிஞ்சித் யெர்மில்லி இசை அமைக்கிறார்.