சமந்தாவின் புதிய அப்டேட்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா,தற்போது பாலிவுட்டை கலக்கி வருகிறார். அதோடு பல்வேறு வெப் சீரிஸிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ் தமிழ் உடன் இணைந்துள்ளார். சமீபத்தில் அவர் தயாரித்து நடித்த எங்க வீட்டு தங்கம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகமும் உருவாக உள்ள நிலையில், அவரது திரைப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தூங்குகிறது.இதுகுறித்து சமந்தா கூறியது, “இந்த ஆண்டு எனக்கு லக்காக உள்ளது. சோனி லிவ் தமிழ் உடன் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த ஒரு புராஜெக்ட்டிற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். அதைப்பற்றிய விவரங்களை மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.