முத்தமழை பொழிந்த சமந்தா
நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகி ’சுபம்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படம் கடந்த மே மாதம் 9-ந்தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில்
சமந்தா துபாயில் நடந்த தங்கநகை பிராண்ட் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். இதில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க நிற புடவையில் வந்து அசத்தினார். அவரை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் கையசைத்தனர். அதன் பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட சமந்தா ,பறக்கும் முத்தங்களை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.