ரசிகர்களைக் கிறுகிறுக்க வைத்த சைத்ரா
3 பிஎச்கே,மை லார்ட் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர்.இவர் ஒரு சிறந்த பாடகி. பல படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். அண்மையில் மை லார்ட் படத்தின் புரோமோசனில் தமிழ் பாடல் ஒன்றை மிகவும் அழகாக பாடினார். முறைப்படி கர்நாடக இசையைக் கற்றவர். சோசியல் மீடியாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.கையில் ஆப்பிள் உடன் கண்ணில் காந்த பார்வையில் ரசிகர்களைக் கிறுகிறுக்க வைத்துள்ளார். அவரின் இந்த கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.