சாய் பல்லவியின் செம ரீல் வீடியோ

சாய் பல்லவியின் செம ரீல் வீடியோ
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என சாய் பல்லவியின் திரைப்பயணம் ‘பிசி’யாக சென்று கொண்டிருக்கிறது.அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி இந்தி மொழியில் தயாராகும் ராமாயணம் படத்தில் சீதை கேரக்டரில் நடித்துள்ளார்.சினிமா நடிப்பில் தீவிரமாக இருந்து வரும் சாய் பல்லவி கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு பொழுதை கழிக்கிறார்.
அந்த வகையில் ஒரு நாள் பொழுதை தனது தாத்தா, பாட்டி மற்றும் குடும்பத்துடன் நேரம் ஒதுக்கி கொண்டாடி மகிழ்வதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பெற்றோர், தாத்தா-பாட்டி, சகோதரியுடன் மகிழ்ச்சியாக கழித்த தருணங்களை ஒரு ரீல் வீடியாவாக சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். நீ இருக்கும் போது வசந்தம் எங்கள் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment