விருதுக்கு பெருமை சேர்க்கும் சாய் பல்லவி
தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை சாய் பல்லவி ராமாயணம் படம் மூலம் பாலிவுட் திரை உலகிலும் தடம் பதித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பு, உடல்மொழி ஆகியவை ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. சினிமாவுக்கு வந்து 10 வருடங்களில் அதிக விருதுகளை பெற்ற நடிகையாக சாய்பல்லவி இருக்கிறார். இதுவரை 15 படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர் 47 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 28 விருதுகளை வென்றுள்ளார். 6 பிலிம்பேர் விருது,3 சைமா விருது, சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருது என பல விருதுகளை பெற்ற சாய் பல்லவி, அந்த விருதுகளுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.