சாய் அபயங்கர் ஜோடியாக மமீதா பைஜு

சாய் அபயங்கர் ஜோடியாக மமீதா பைஜு
இளம் இசை அமைப்பாளர் சாய் அவயங்கர் இசையமைப்பில் வெளியான முதல் படமான ‘டியூட்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படமும் ஹிட் அடித்தது. இதனால் முன்னணி மியூசிக் டைரக்டராக மாறிய அவர் தற்போது , ‘மார்ஷல்’, ‘ராக்கா’, ‘ஓம்’, ‘பென்ஸ்’, ‘தமிழ் முருகன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு ஆல்பங்களுக்கு இசையமைத்து ஆடி,பாடி நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் பவளமல்லி என்ற இசை ஆல்பத்தில் கயாடு லோக்கருடன் ஆடி பாடினார். அந்தப் பாடல் இணையத்தில் வைரலானது.இந்த நிலையில், சாய் அபயங்கர் தனது அடுத்த புதிய ஆல்பம் பாடலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த ஆல்பத்தில் அவருடன் மமீதா பைஜூ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment