எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் பட பர்ஸ்ட் லுக்
இயக்குனராக அறிமுகமாகி பின்னர், நடிகராகி தமிழ் சினிமாவை கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கில்லர் என்ற படத்தை அவர் இயக்கி, நடித்து வருகிறார்.இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியிடப் பட்டுள்ளது. அதில் ஹீரோயின் பிரீத்தி அஸ்ரானியை, ஹீரோ எஸ்.ஜே.சூர்யா அழகாக தோளில் தூக்கி வைத்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.