ரவி மோகன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா
சந்தானம் நடித்த டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கவுள்ள புதிய படத்தில் ரவிமோகன் நடிக்க உள்ளார். இதில் மற்றொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்டாக உருவாகிறது. இதன் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் துவங்கும் என கூறப்படுகிறது.