பாரதிராஜா உடல் நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
தமிழ் திரை உலகில் மூத்த இயக்குனரான பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவியது.இந்த நிலையில் பாரதிராஜா நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து நேற்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறி வருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கி றார் என்ன பதிவிட்டுள்ளார்.