‘ ரவுடி ஜனார்த்தனா’ போஸ்டர் வெளியீடு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரவுடி ஜனார்த்தனா’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.விஜய் தேவர கொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு ள்ளது. பான் இந்தியா ரூரல் ஆக்ஷன் கதையாக உருவாகி வரும் இதில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.