ரெட்ட தல விமர்சனம்
புதுச்சேரியில் சிறுவயதிலேயே ஆதரவற்ற அருண் விஜய்யையும், சித்தி இத்னானியும் நண்பர்களாக பழகி வருகின்றனர். பின்னர்
சித்தியை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அருண் விஜய்யிடம், சொகுசு வாழ்க்கை வாழ நினைப்பதாக கூறுகிறார். இதனால் ஆள் மாறட்டும் செய்து கொலை வழக்கில் சிக்குகிறார் அருண் விஜய். அதிலிருந்து எப்படி மீண்டார்?ஆள் மாறட்டும் செய்த இன்னொரு அருண் விஜய் யார்? என்பதே படத்தின் மீதி கதை.
டபுள் ஆப்ஷனில் அருண் விஜய் தூள் கிளப்பு இருக்கிறார். ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். சித்தி இத்னானி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். ஹரிஷ் போராடி, ஜான் விஜய், யோகேஷ் டிஜோ டாமி,தன்யா ரவிச்சந்திரன், தீவ்ரா, பாலாஜி முருகதாஸ் ஆகியோரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஹாலிவுட் ஸ்டைலில் கதையை எழுதிவிட்டு திரைக்கதையில் எண்ணற்ற விஷயங்களை புகுத்தி சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன். இருப்பினும் திரைக்கதையில் ஆங்காங்கே சற்று தேக்கம் ஏற்படுகிறது சாம் சி எஸ் இசையில் தனுஷ் பாடிய கண்ணம்மா பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக உள்ளது.