அமோக வெற்றி: விஜய்க்கு திரையுலகம் வாழ்த்து

அமோக வெற்றி: விஜய்க்கு திரையுலகம் வாழ்த்து
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய், தேர்தலில் அபார வெற்றி பெற்று110 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளார். கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே 45 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள அவருக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமலஹாசன்:
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.

அஜித் குமார் :
சிறப்பான வெற்றியை பெற்றுள்ள விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் அஜித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

சூர்யா:
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

 

சிவகார்த்திகேயன்:
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்.

சூரி:
விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விக்ரம்:
வாழ்த்துக்கள் நண்பா. நீங்கள் புதிய வரலாறு படைத்துள்ளீர்கள்.

ஜீவா:
கடற்கரையில் உள்ள தனது வீட்டு பால்கனியில் நின்றபடி விசில் சின்னத்தை குறிக்கும் வகையில் மூன்று முறை விசில் அடித்து கையை தம்சப் செய்து ஆனந்த கண்ணீரோடு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ராகவா லாரன்ஸ்:
எனது நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள். இன்று நீங்கள் உண்மையான வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களின் மகிழ்ச்சிக்காக நான் எப்போதும் இறைவனை பிரார்த்தனை செய்வேன்.

கௌதம் ராம் கார்த்திக்:
வாழ்த்துக்கள் விஜய் சார். ஒட்டு மொத்த வெற்றியையும் துடைத்தெடுத்து விட்டீர்கள். இதற்கு உங்களின் கடின உழைப்பும், உண்மையும் தான் காரணம். உங்களுடைய புதிய பாதைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆரவ் :
வாழ்த்துக்கள் விஜய் சார். உங்களின் வெற்றி, ஒப்பிட முடியாத வெற்றியாவும். உங்கள் தலைமையில் தமிழகத்தில் புதிய மாற்றங்களும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என வாழ்த்துகிறேன்.

 

சிலம்பரசன் டி ஆர்:
வரலாறு எப்போதும் உருவாவது கிடையாது. அதுவே உருவாக்கிக் கொள்ளும். வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!.

 

பிரதீப் ரங்கநாதன்:
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வெற்றியை பெற்றுள்ள விஜய் சாருக்கு வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்!

 

சிவகுமார்:
தம்பி ! மக்கள் உன் மீது அசாத்திய நம்பிக்கை வைத்து பெருமளவு வாக்களித்து
முதல்வராக்கியுள்ளனர். அவர்கள் கனவை நனவாக்கும் வகையில் தமிழ் மக்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க என் மனப்பூர்வ ஆசிகள்.

 

அருண் விஜய்:
மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மக்களின் வெற்றி.

 

ஹரிஷ் கல்யாண்:
தமிழக மக்கள் உங்களுடைய உண்மையான அன்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து தவெக வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

சிரஞ்சீவி :
முதல் தேர்தலிலேயே அற்புதமான, தகுதியான வெற்றியைப் பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். உங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் தலைமையை ஏற்று கொண்டுள்ள மக்களுக்கு நீங்கள் சிறந்த சேவை யாற்றுங் கள். உங்களின் மக்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். அதோடு தமிழக மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

இயக்குனர் நெல்சன்:
வியக்கத்தக்க நுழைவு. வரலாற்று வெற்றி, வாழ்த்துக்கள் விஜய் சார்.

இயக்குனர் பேரரசு:
கடந்த ஆட்சியின் ஏமாற்றத்தின் பிரதிபலிபாகவும், புதிய மாற்றத்தின் எதிர்பார்பும் தான் இந்த வெற்றி!. அதோடு தான் எழுதிய ‘சிவகாசி’ படத்தின் பாடலை பாடி வாழ்த்தினார்.

இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் :
மின்சார வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் :
தேர்தலில் சமூக வெற்றி பெற்றுள்ள விஜய் சாருக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்:
“அன்புள்ள விஜய்க்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துகள்”

ரஜினிகாந்த்:
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

தனுஷ் :
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Comments (0)
Add Comment