வரும் 13 ம் தேதி முதல் ‘ரிசார்ட்’ ரெடி!!
ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெளியீடாக ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸ் வரும் 13 ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில் இது திட்டமிடப்பட்டு ள்ளது. பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இதில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் இந்த சீரிஸின் மூலம் கைகோர் த்துள்ளார்.‘ஆர்.ஆர் ரிசார்ட்’ என்ற கற்பனை யான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. இதில் தலைவாசல் விஜய்,கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.