‘மகாகாளி’ படத்தின் ரிலீஸ் அப்டேட்
ஆர்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்க, ஆர் கே துக்கல் வழங்கும் படம் மகாகாளி.இதனை இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லூரு இயக்குகிறார். இது பிரசாந்த் வர்மாவின் திரைப்பட பிரபஞ்சத்தின் அடுத்த படைப்பாக அமைகிறது. இப்படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, பூமி ஷெட்டி, ரோஹித் ஷரஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஸ்மரன் சாய் இசை அமைக்க,சுரேஷ் ரஹடு ஒளிப்பதிவு செய்துள்ளார். நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான சாதாரண மோதலை விட,மிகப்பெரியதொரு முரண்பாட்டில் தெய்வீக சக்திகள் சிக்கிக் கொள்ளும் நிலையில், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான ஒரு வலிமையான போருக்கான களத்தை இந்த படக்காட்சிகள் அமைக்கிறது. இந்த பிரம்மாண்டமான படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி வெளியாகிறது.