“கான் சிட்டி” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் ‘கான் சிட்டி’.இதில் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென் ஆகியோர் லீட் ரோலில் நடிக்க, யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. புதுமையான கதைக்களத்தில், பேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.