’இடிமுழக்கம்’ படத்தின் 2 குத்துப்பாடல்கள் வெளியீடு

’இடிமுழக்கம்’ படத்தின் 2 குத்துப்பாடல்கள் வெளியீடு
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’இடிமுழக்கம்’.ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இப்படம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது ‌. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கானா விளக்கு மயிலே…’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவாகியு ள்ள கானா விளக்கு மயிலே’ பாடலை கவிஞர் வைரமுத்து எழுத ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.மற்றொரு பாடலான ‘அடி தேனி சந்தையில்…’ பாடலை லா. வரதன் எழுத, ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர்.

Comments (0)
Add Comment