ஸ்ரீலீலாவின் “மாஸ் ஜாதரா” பட ரிலீஸ் தேதி
அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்கியுள்ள படம் “மாஸ் ஜாதரா”. இதில் ரவி தேஜா ஹீரோவாகவும் ஸ்ரீலீலா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.’தமாகா’ படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாக உள்ளது. முதலில் இந்தப் படம் மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.