ரீமா சென், தமன்னா போல பேசப்படுவேன்: நடிகை ரோஸ்மின்!
மாடலிங் துறையில் தடம் பதித்து, தற்போது சினிமாவில் ஹீரோயினாகி இருக்கிறார் ரோஸ்மின். இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். முதல் பட அனுபவம் குறித்து அவர் கூறியது, ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்களோ அதுபோலவே எனக்கும் இதில் நல்ல கேரக்டர். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் போன்று தனக்கும் இதில் உள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.